ADDED : டிச 22, 2024 01:00 AM
மாணவி உட்பட 4 பெண்கள் மாயம்
கிருஷ்ணகிரி, டிச. 22-
ஊத்தங்கரை அடுத்த மண்ணடிப்பட்டியை சேர்ந்தவர் ரேகா, 38. கடந்த, 5ல் மாயமானார். அவரின் கணவர், கல்லாவி போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தார். அதில், ஊத்தங்கரை அடுத்த பனமரத்துப்பட்டியை சேர்ந்த இளையராஜா, 40, என்ற லாரி டிரைவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த பெரியகரடியூரை சேர்ந்தவர் கிருத்திகா, 21, எம்.காம்., முதலாமாண்டு மாணவி. கடந்த, 17ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகாரளித்தனர். அதில், பெரியகரடியூரை சேர்ந்த ஹரிஹரன், 20, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 24. இவர், சின்னார் பகுதியில் சீதாப்பழம் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த, 18ல் வீட்டிலிருந்து சீதாப்பழம் விற்க பஸ்சில் செல்ல, கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்ட் சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் கலைமதி, 22. கடந்த, 18ல் மாயமானார். அவரது தாய் ராணி, 42, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், கலைமதியை தேடி வருகின்றனர்.