/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
40 சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆடு வளர்க்க ரூ.40 லட்சம் சுழல் நிதி

ADDED : மார் 23, 2025 01:05 AM
40 சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆடு வளர்க்க ரூ.40 லட்சம் சுழல் நிதி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மூன்றம்பட்டி மற்றும் தளி வட்டாரத்தில் உள்ள உனிசேநத்தம் பஞ்.,களை சேர்ந்த, 40 சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு, 'ஆடுகள் வளர்ப்பு தொகுப்பு' திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பயன்பெற்ற பயனாளிகளிடம், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சியின் மூலம், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேரில் சந்தித்து பேசியதாவது: மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த கிராமப்புற மகளிர், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள, ஆடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆடு வளர்ப்பு என்பது, சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு சிறந்த வாழ்வாதார நடவடிக்கை. ஒரு ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்குவது, குறுகிய காலத்தில் நல்ல லாபத்தை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான காரணி. கிராமப்புற பொருளாதாரத்தில், மானாவாரி மற்றும் வறண்ட பகுதிகளுக்கு ஆடு வளர்ப்பு ஒரு சிறந்த தொழில்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பண்ணை வாழ்வாதார திட்டங்கள் மூலம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊத்தங்கரை, தளி வட்டாரத்தில், 40 பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பு தொகுப்பு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.