/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசம்பட்டியில் 40 'சிசிடிவி' கேமரா
/
அரசம்பட்டியில் 40 'சிசிடிவி' கேமரா
ADDED : செப் 03, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டியில், தர்மபுரி, திருப்பத்துார், பாரூர், பண்ணந்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில், 4 வழிச்சாலை அமைந்துள்ளது.
இங்கு அடிக்கடி பல்வேறு குற்றச்செயல்கள், போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இதனால் அரசம்பட்டியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பினர் இணைந்து, 40 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி அவைகளை கண்காணிக்கும் விதமாக புறகாவல் நிலையம் அமைத்துள்ளனர். இதை நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கராஜ் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.