/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெறிநாய் குதறியதில் 40 நாட்டுக்கோழி பலி
/
வெறிநாய் குதறியதில் 40 நாட்டுக்கோழி பலி
ADDED : ஜூன் 22, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் யூனியன், தாண்டாகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் வெங்கடேசன், 50; விவசாயி. இவர் வீட்டின் அருகே, சிறிய பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, இந்த பண்ணைக்குள் புகுந்த வெறிநாய்கள், கோழிகளை கடித்து குதறி இறைச்சியை ருசித்துக்கொண்டிருந்தன. அப்போது, மற்ற கோழிகளின் சத்தம்கேட்டு வந்த வெங்கடேசன், நாய்களை விரட்டியடித்தார். பின், பண்ணையில் சென்று பார்த்த போது, 40 கோழிகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
கால்நடைதுறையினர், நாய்கள் கடித்து இறந்த நாட்டு கோழிகளை பார்வையிட்டு, பிரேத பரிசோதனை செய்து குழிதோண்டி புதைத்தனர்.