/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு 4,269 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு 4,269 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு 4,269 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு 4,269 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : மே 05, 2025 02:34 AM
கிருஷ்ணகிரி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நேற்று நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 9 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 720 மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 697 பேர் தேர்வெழுதினர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 480 பேரில், 467 பேர் தேர்வெழுதினர். பகல், 1:32 மணிக்கு தேர்வெழுத வந்த மாணவரை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் பெற்றோர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் புகார் அளித்த நிலையில், அந்த மாணவரை தேர்வெழுத போலீசார் உள்ளே அனுமதித்தனர். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 360 பேரில், 344 பேர் தேர்வெழுதினர். ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 480 பேரில், 463 பேர் தேர்வெழுதினர். காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 480 பேரில், 458 பேர் தேர்வெழுதினர். சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 480 பேரில், 465 பேர் தேர்வெழுதினர். ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 600 பேரில், 587 பேர் தேர்வெழுதினர். ஓசூர் முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 480 பேரில், 460 பேர் தேர்வெழுதினர். ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 336 பேரில், 328 பேர் தேர்வெழுதினர்.
மாவட்டம் முழுவதும், 9 மையங்களில், 4,416 மாணவ, மாணவியரில், 4,269 பேர் தேர்வெழுதினர். 147 பேர் தேர்வெழுத வரவில்லை. மாணவ, மாணவியரை காலை, 10:00 மணி முதல் பெற்றோர்கள் அழைத்து வந்த நிலையில், அனைத்து தேர்வு மையங்களின் வெளியில் அமரவும், நிற்கவும், நிழற்கூடம் எதுவும் அமைக்காததால், பெற்றோர்கள் நீண்ட நேரம் வெயிலில் பதட்டத்துடன் நின்றிருந்தனர்.