/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கந்த சஷ்டி 4ம் நாள் விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
கந்த சஷ்டி 4ம் நாள் விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
கந்த சஷ்டி 4ம் நாள் விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
கந்த சஷ்டி 4ம் நாள் விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : அக் 26, 2025 01:11 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெரியார் நகர் வேல்
முருகன் கோவிலில் கடந்த, 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். தினமும் மூலவர் வேல்முருகனுக்கு சிறப்பு பூஜை, அபி ேஷகம், அலங்காரம் செய்யப்படுகிறது. 4ம் நாளான நேற்று மாலை, சிறப்பு சத்ரு சம்ஹார பூஜை நடந்தது.
வேல்முருகனுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், உலர் பழங்கள் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில், 5ம் நாளான இன்று (அக்., 26) மாலை, 5:30 மணிக்கு, அம்மனிடம் சக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி, நாளை (அக்., 27) மதியம், 3:30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது.