/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50,000 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50,000 கன அடியாக சரிவு
ADDED : அக் 26, 2025 01:10 AM
ஒகேனக்கல், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில், 50,000 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணைகளின் பாதுகாப்பு கருதி அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, தொட்டமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 6:00 மணிக்கு 50,000 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையெடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று, நான்காவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

