/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லாரியை திருடி விற்ற 5 பேர் கைது
/
லாரியை திருடி விற்ற 5 பேர் கைது
ADDED : மே 03, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்சமங்கலத்தில் தனியார் கிரானைட் தொழிற்சாலை உள்ளது. இங்கு கந்திகுப்பம் அருகே உள்ள சஜ்ஜலப்பள்ளியை சேர்ந்த சுப்பிரமணி, தன் டிப்பர் லாரியை நிறுத்தி இருந்தார். கடந்த, 19ல், லாரி திருட்டு போனது. இது குறித்து அவர் கடந்த, 22ல், கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கந்திகுப்பம் அருகிலுள்ள இன்ஜினியரிங் கல்லுாரி அருகில் பதிவெண் இல்லாமல் வந்த பைக்கில் வந்த இருவரை கந்திகுப்பம் போலீசார் மடக்கினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர். பைக்கில் வந்தவர்கள், கல்லாவி அடுத்த ராமகிருஷ்ணம்பதியை சேர்ந்த சண்முகம், 30, திருப்பத்துார் மாவட்டம் வள்ளிப்பட்டை சேர்ந்த விஜயகுமார்,39, என்பதும், இவர்கள் சுப்பிரமணியின் லாரியை திருடியதும் தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இத்திருட்டில் தொடர்புடைய திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த சதீஷ்குமார், 33, ராஜேஷ், 30, முத்து
கிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்தனர்.