sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையை கடந்த 5 யானைகள்

/

சாலையை கடந்த 5 யானைகள்

சாலையை கடந்த 5 யானைகள்

சாலையை கடந்த 5 யானைகள்


ADDED : அக் 19, 2024 01:25 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையை கடந்த 5 யானைகள்

ஓசூர், அக். 19-

தேன்கனிக்கோட்டை வனச்சரகம், ஆலஹள்ளி காப்புக்காட்டில், 5 யானைகள் முகாமிட்டிருந்தன. இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்ததால், அவற்றை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆலஹள்ளி காப்புக்காட்டில் இருந்து யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர். அப்போது, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையை, மரக்கட்டா கிராமம் அருகே கடந்த, 5 யானைகளும், அடுத்த கரையிலுள்ள வனப்பகுதி நோக்கி சென்றன.

யானைகள் சாலையை கடந்ததால், இருபுறமும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானைகள் பாதுகாப்பாக சென்ற பின், வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். தேன்கனிக்கோட்டை அடுத்த கெண்டகானப்பள்ளி அருகே, 5 யானைகளும் முகாமிட்டுள்ளன. அதனால் விவசாயிகள், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us