ADDED : ஜூன் 19, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு மற்றும் அருணபதி பகுதிகளில், கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற, 5 பேரை ஊத்தங்கரை போலீசார்
நேற்று கைது செய்தனர். ஊத்தங்கரை போலீஸ் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் தலைமையில் போலீசார், அருணபதி கூட்ரோட்டை சேர்ந்த சத்யா, 45, மணிலா, 55, காரப்பட்டு தேவிகா, 45, அண்ணா நகர் பசுபதி, 35, பெருமா, 65, ஆகிய, 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.