தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்

2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்


ADDED : ஜூன் 23, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பொன்மலை கோவில் கிராமத்தை சேர்ந்-தவர் பழனிசாமி, 40. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள இந்தோ -- திபெத் எல்லை காவல்படையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மாயா, 34. கடந்த, 16ம் தேதி காலை, 8:30 மணிக்கு, தன், 13 வயது மகள், 10 வயது மகனுடன் வீட்டிலிருந்து சென்ற மாயா மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் பழனிசாமி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சந்தேகத்தின் பேரில் பொன்மலை கோவில் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவ-ரையும், மாயா மற்றும் குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர், 16 வயது மாணவி, அரசு பள்-ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், பாறைக்கோட்டையை சேர்ந்த டிரைவர் ஜீவா, 22, மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்-கின்றனர்.

பேரிகை அருகே அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் மகள் ஷிராவாணி, 19. கிருஷ்ணகிரியில் தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 20 இரவு, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், கே.என்., தொட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்ரம், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us