/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; 8 பேர் காயம்
/
அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; 8 பேர் காயம்
ADDED : டிச 22, 2024 01:01 AM
ஓசூர், டிச. 22-
ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பேரண்டப்பள்ளி வனப்
பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. வாகன ஓட்டிகள் பலர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து, ராயக்கோட்டை சாலை வழியாக தர்மபுரி நோக்கி சென்றனர். இந்நிலையில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்ற கார், லாரி, வேன் உட்பட மொத்தம், 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி கவிழ்ந்தன. இதில், வேன் டிரைவர் மற்றும் சிறுமி உட்பட, 8 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு, ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.