/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயிற்சி வக்கீல், தனியார் ஊழியர்கள் உட்பட 5 இளம் பெண்கள் மாயம்
/
பயிற்சி வக்கீல், தனியார் ஊழியர்கள் உட்பட 5 இளம் பெண்கள் மாயம்
பயிற்சி வக்கீல், தனியார் ஊழியர்கள் உட்பட 5 இளம் பெண்கள் மாயம்
பயிற்சி வக்கீல், தனியார் ஊழியர்கள் உட்பட 5 இளம் பெண்கள் மாயம்
ADDED : நவ 16, 2024 01:44 AM
பயிற்சி வக்கீல், தனியார் ஊழியர்கள்
உட்பட 5 இளம் பெண்கள் மாயம்
கிருஷ்ணகிரி, நவ. 16-
ஊத்தங்கரை அடுத்த கல்லூரை சேர்ந்தவர் கோகனேஸ்வரி, 24. வக்கீலான இவர், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரின் தாய் ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். அதில், சாமல்பட்டியைச் சேர்ந்த கருமுகில்வேந்தன், 24, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரும் பயிற்சி வக்கீலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
* ஓசூர் அடுத்த ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஷாகிதா பானு, 21, பட்டதாரி. இவர் கடந்த, 13 மதியம் வீட்டிலிருந்து கிருஷ்ணகிரி சென்றுள்ளார். கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வந்தவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். அதில், லிங்கன், 25, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரியை சேர்ந்த, 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தாய் அளித்த புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த சஞ்சீவன்கொட்டாயை சேர்ந்தவர் வெண்ணிலா, 20. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 8ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை நேற்று முன்தினம் அளித்த புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* வேப்பனஹள்ளி அடுத்த என்.தாசரிபள்ளியை சேர்ந்தவர் ரிஸ்வானா, 21, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 13ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் வேப்பனபஹள்ளி போலீசில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.