ADDED : செப் 30, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.
வக்கீல் நாராயணா மற்றும் பூபதி, ரகு, விக்ரம் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், மாற்று கட்சிகளிலிருந்து விலகி, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலையில், தங்களை தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.
ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் ஆஞ்சப்பா, தி.மு.க., மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம், வார்டு செயலாளர் எல்லப்பா உட்பட பலர்
பங்கேற்றனர்.