/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.20 லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்க தடை 52 விற்பனை நிலையங்கள் ஆய்வில் நடவடிக்கை
/
ரூ.20 லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்க தடை 52 விற்பனை நிலையங்கள் ஆய்வில் நடவடிக்கை
ரூ.20 லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்க தடை 52 விற்பனை நிலையங்கள் ஆய்வில் நடவடிக்கை
ரூ.20 லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்க தடை 52 விற்பனை நிலையங்கள் ஆய்வில் நடவடிக்கை
ADDED : அக் 17, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, ராபி பருவத்திற்கு தேவையான தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்றடையும் நோக்கத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விதை விற்பனை நிலையங்களில், வேலுார் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில், 2 மாவட்டங்களில், 52 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து, 20.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 687 கிலோ விதைகளுக்கு தடை விதித்தனர். மேலும், 3 விதை விற்பனை நிலையங்களின் விற்பனை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தும், ஒரு விதை விற்பனை நிலையத்தின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தும், மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவிட்டார்.
ஆய்வில், விதை ஆய்வாளர்கள் தர்மபுரி கண்ணன், கிருஷ்ணகிரி கார்த்திக், ஓசூர் சரவணன், குடியாத்தம் சுமதி, வேலுார் கவுதமி, ஆரணி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மணி கூறுகையில், ''ரபி பருவத்திற்கு தற்போது நல்ல மழை பெய்துள்ளதால், தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில், தமிழகம் முழுவதும் ஆய்வு நடக்கின்றன. தற்போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், விதை இருப்பு பதிவேடு முறையாக பதிவேற்றம் செய்யாமல், விவசாயிகளுக்கு முறையாக பில் வழங்காத, உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் கலந்து விதையை சேமித்து வைத்திருந்த, முளைப்புத்திறன் சான்று இல்லாமல் விற்பனை செய்த, 52 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், 20.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 687 கிலோ விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விதை விற்பனை செய்வோர், விதை விற்பனை சட்டத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.