/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவர் கைது
/
அரசு பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவர் கைது
ADDED : அக் 17, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்தவர் மேனகா, 40. இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சாமல்பள்ளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, பள்ளிக்கு நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், மேனகா கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்ப முயன்றனர். அப்போது மேனகா கூச்சலிட்டவுடன் அருகில் இருந்தவர்கள், சங்கிலியுடன் இருந்தவரை பிடித்தனர். மற்றொருவர் பைக்கில் தப்பினார். பிடிபட்டவரை, சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம், பெங்களூரு வி.எஸ்.பி., காலனியை சேர்ந்த குமரேஷ், 35, என தெரிந்தது. தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தொடர் டூவீலர் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.