/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
9ம் ஆண்டு கம்பன் கழக விழாவில் 573 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
/
9ம் ஆண்டு கம்பன் கழக விழாவில் 573 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
9ம் ஆண்டு கம்பன் கழக விழாவில் 573 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
9ம் ஆண்டு கம்பன் கழக விழாவில் 573 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
ADDED : அக் 21, 2024 07:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த கம்பன் கழக விழாவில், பல்வேறு துறைகளை சேர்ந்த, 573 பேருக்கு சான்-றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில், கம்பன் கழகம் சார்பில், 9ம் ஆண்டு கம்பன் கழக விழா நேற்று நடந்தது. மக-ளிரணி தலைவி மதுமொழி ஆனந்த் வர-வேற்றார். கம்பன் கழக நிறுவன தலைவர் ரவீந்தர் தலைமை வகித்தார். பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், கம்பன் கழக விழாவை துவக்கி வைத்து பேசினார். கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
'கம்பனின் சமுதாய புரட்சி' என்ற தலைப்பில், கம்பன் கழக இணைச்செயலாளர் தமிழ்.திருமால், 'அவைக்கம்பனும், அறிவியலும்' என்ற தலைப்பில் தலைமையாசிரியர் மகேந்திரன், 'ராமனும், குகனும்' என்ற தலைப்பில் கிருபா-னந்தா வாரியாரின் சீடர் உமாசங்கர், 'கம்பனால் நாம்' என்ற தலைப்பில் ஜே.சி.ஐ., தேசிய பயிற்சி-யாளர் பாலமுருகன் ஆகியோர் பேசினர்.இதில், கம்பன் குறித்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் முதல், 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர், 100 பேருக்கும், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், 250 பேருக்கும், மகளிர் மன்றத்தை சேர்ந்த, 100 பேருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, 98 தன்னார்வலர்கள் மற்றும் கம்பன் கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய, 25 பேருக்கும் என மொத்தம், 573 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. கம்பன் கழக அவைத்தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். விழாவில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

