ADDED : நவ 21, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில், 58வது தேசிய நுாலக வாரவிழா நிகழ்வின் நிறைவு விழா நேற்று நடந்தது. முதல்நிலை நுாலகர் சுப்பிரமணி வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் கமலேசன், மாவட்ட நுாலக அலுவலக கண்காணிப்பாளர் ஹரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
வாசகர் வட்ட துணை தலைவர் கலைச்செல்வி உள்பட அனைத்து வாசகர் வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள், நுாலக வாசகர்கள், உறுப்பினர்கள், போட்டி தேர்வு மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 2ம் நிலை நுாலகர் நந்தகுமார் நன்றி கூறினார்.
* ஊத்தங்கரை கிளை நுாலகத்தில், 58ம் ஆண்டு தேசிய நுாலக வாரவிழா நேற்று நடந்தது. வட்டார ஊதிய மைய நுாலகர் தேவேந்திரன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டார வள அலுவலர் பழனிசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், உடற்கல்வி ஆசிரியர் தமயந்தி, வாசகர்கள், மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.

