/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குறைதீர் கூட்டத்தில் 594 மனுக்கள்
/
குறைதீர் கூட்டத்தில் 594 மனுக்கள்
ADDED : டிச 10, 2024 01:36 AM
குறைதீர் கூட்டத்தில்
594 மனுக்கள்
தர்மபுரி, டிச. 10-
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைதீர் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், 594 மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர். மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சின்னமொரசுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதிக்கு, முக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
தம்பதியினர் இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதால், கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்தும், கிராம மக்களின் பங்களிப்பாக பெற்ற தொகையிலிருந்தும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு பணம் ஏதுமின்றி வீடு ஒதுக்கி, அகற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.