/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.94 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் திறப்பு
/
ரூ.94 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் திறப்பு
ADDED : டிச 17, 2024 01:41 AM
ஓசூர், டிச. 17-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மடிவாளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் (ஆங்கில வழி), 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 94 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்தார்.
அப்போது, மாணவ, மாணவியர் மற்றும் அவரது பெற்றோர், மடிவாளம் துவக்கப்பள்ளியை, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., பிரகாஷ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பி.டி.ஓ., பாலாஜி, தலைமையாசிரியர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

