/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 மாணவி உட்பட 6 பேர் மாயம்
/
பிளஸ் 2 மாணவி உட்பட 6 பேர் மாயம்
ADDED : நவ 15, 2024 02:26 AM
பிளஸ் 2 மாணவி உட்பட 6 பேர் மாயம்
ஓசூர், நவ. 15-
ஓசூர், அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சங்கீதா, 26. இவர் கடந்த, 12ல், தன், 4 வயது மகள் விசாலியுடன் வீட்டிலிருந்து மாயமானார். அவரது கணவர் ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 26, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திகிரி அடுத்த பெலகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் டாம் ஜெசிந்தர், 23, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 12ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி மத்தகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாகலுார் அடுத்த ஒத்தபள்ளியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 30. கடந்த, 5ல் மாயமானார். அவர் தந்தை புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தளி அடுத்த இருதுகொட்டாயை சேர்ந்தவர் மாரம்மா, 65. கடந்த, 8ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லாவியை சேர்ந்தவர், 17 வயது, பிளஸ் 2 மாணவி. இவர் கடந்த, 9ல், வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்து அவரது தந்தை கல்லாவி போலீசில் புகாரளித்தார். அதில், கல்லாவியை சேர்ந்த விஷால், 21, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.