/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனிமங்கள் கடத்திய 6 வாகனம் பறிமுதல்
/
கனிமங்கள் கடத்திய 6 வாகனம் பறிமுதல்
ADDED : ஆக 24, 2025 12:52 AM
வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், கத்திரிப்பள்ளி அருகே, வேப்பனஹள்ளி ஆர்.ஐ., தர்மன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் மாலை, வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், நாச்சிக்குப்பத்திலிருந்து கத்திரிப்பள்ளிக்கு, 4 யூனிட் மண் கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, வேப்பனஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.
பாகலுார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஏரிக்கரையில், பொக்லைன் வாகனத்தை பயன்படுத்தி, லாரிகளில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வருவாய்த்
துறையினர், உரிய அனுமதியின்றி மண் அள்ளியதாக, ஒரு பொக்லைன் மற்றும் 10 யூனிட் மண்ணுடன் நின்ற, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, பாகலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
பர்கூர் அடுத்த பூசிநாயக்கனுார் கிராமம் அருகே, பட்லப்பள்ளி வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய
அனுமதி சீட்டு இல்லாமல், மத்துாரிலிருந்து பர்கூருக்கு, 2 யூனிட் மண் ஏற்றி வந்த, மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.
தளி அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், டிராக்டர் உதவியுடன் கற்களை வெட்டி எடுப்பதாக, கிருஷ்ணகிரி சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷாவிற்கு தெரிந்தது. அங்கு சென்ற அவரது தலைமையிலான அதிகாரிகள், டிராக்டரை பறிமுதல் செய்து, தளி போலீசில்
ஒப்படைத்தனர்.

