/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை வசதி செய்து கொடுக்காத அரசு தேர்தலை புறக்கணிக்க 6 கிராம மக்கள் முடிவு

ADDED : மார் 29, 2024 12:52 AM
ஓசூர்:தேன்கனிக்கோட்டை
அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்., உட்பட்ட தொளுவபெட்டா, டி.பழையூர்,
கல்பண்டையூர், குல்லட்டி, கவுனுார், தொட்டதேவனஹள்ளி ஆகிய
கிராமங்களில், 400 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வசிக்கின்றனர்.
இக்கிராமங்களுக்கு மேலுார் கிராமத்தில் இருந்து சாலை வசதி இல்லை.
கடந்த, 3 முறை சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க
கிராம மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் அதிகாரிகள் பேசி, சாலை அமைக்க
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், தேர்தல் புறக்கணிப்பை
மக்கள் கைவிட்டு ஓட்டளித்தனர். ஆனால், இதுவரை சாலை வசதி செய்து
கொடுக்கப்படவில்லை.
அதிகாரிகளிடம் சென்று மக்கள் கேட்டால்,
அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம் என கூறுகின்றனர்.
இக்கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியர் கல்வி பயில, அரசு
நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. மேற்படிப்பு செல்லவும்,
மருத்துவமனைக்கு செல்லவும் சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள்
சிரமப்படுகின்றனர். எனவே, சாலை வசதி செய்து கொடுக்காததை
கண்டித்து, இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் லோக்சபா தேர்தலை
புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் மக்களை அழைத்து பேச,
முடிவு செய்துள்ளனர்.