/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிகளில் காலை உணவு திட்டம் 66,326 மாணவ, மாணவியர் பயன்
/
பள்ளிகளில் காலை உணவு திட்டம் 66,326 மாணவ, மாணவியர் பயன்
பள்ளிகளில் காலை உணவு திட்டம் 66,326 மாணவ, மாணவியர் பயன்
பள்ளிகளில் காலை உணவு திட்டம் 66,326 மாணவ, மாணவியர் பயன்
ADDED : ஆக 27, 2025 01:45 AM
கிருஷ்ணகிரி, நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி புனித அன்னாள் அரசு உதவிபெறும் பெண்கள் துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்திட்டம் மேலும் விரிவு செய்யப்பட்டுள்ளது.
ஓசூர் மாநகராட்சி ஜான்பாேஸ்கோ துவக்கப்பள்ளி, கிருஷ்ணகிரி புனித அன்னாள் அரசு உதவி பெறும் பெண்கள் துவக்கப்பள்ளி, ஆர்.சி.,பாத்திமா அரசு உதவி பெறும் ஆண்கள் துவக்கப்பள்ளி, பர்கூர் ஐ.இ.எல்.சி., அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, கெலமங்கலம் புனித ஜோசப் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, காவேரிப்பட்டணம் பாரதி கல்வி நிலையம் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் பயிலும், 2,142 மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும்.
இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகள், ஊரக மற்றும் நகர் பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
உள்பட, 1,401 பள்ளிகளில் பயிலும், 66,326 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது,'' என்றார்.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., உமாசங்கர், தாசில்தார் சின்னசாமி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜான்போஸ்கோ அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், கவுன்சிலர்கள் பார்வதி, இந்திராணி, பாக்கியலட்சுமி உட்பட பலர், மாணவ, மாணவியருடன் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டனர்.
* தேன்கனிக்கோட்டை புனித ஜோசப் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு காலை உணவை பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். கவுன்சிலர்கள் கிருஷ்ணன், சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்