ADDED : ஆக 12, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி யில், 347 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, கேட்டர்பில்லர் நிறுவனம், தன் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 1.25 கோடி ரூபாய் மதிப்பில், 7 கூடுதல் வகுப்பறை கட்ட முன் வந்தது. கட்டுமான பணி துவக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சென்னீரப்பா, தலைமையாசிரியை உஷாஸ்ரீ தலைமை வகித்தனர். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், கட்டுமான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, கவுன்சிலர் பாக்கியலட்சுமி, கேட்டர் பில்லர் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ் முத்துராமன், சி.எஸ்.ஆர்., இயக்குனர் விஜயாம்பிகை துளசிதாஸ், உட்பட பலர் பங்கேற்றனர்.