/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானை தந்தம் விற்க முயன்ற 7 பேர் கைது
/
யானை தந்தம் விற்க முயன்ற 7 பேர் கைது
ADDED : டிச 23, 2024 09:45 AM
ஓசூர்: ஓசூரில் யானை தந்தங்களை விற்க முயன்ற, 7 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டிலுள்ள மத்தம் சர்க்கிள் பகுதியில், யானை தந்தங்கள் விற்பதாக, வனத்துறைக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது, விற்பனைக்கு வைத்திருந்த ஒரு ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இருதுக்கோட்டை அருகேயுள்ள திப்பனுாரை சேர்ந்த வெங்கடேஷ், 27; கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் விஜயகுமார், 25; ஊத்தங்கரை ஹரிபூபதி, 39, பரந்தாமன், 27; என நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் ஒரு மொபட், 4 மொபைல்போன்களும் சிக்கின. அவர்களிடம் விசாரித்ததில், தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் முனிராஜ், 29, பழையூர் லிங்கப்பா, 39, பசலிங்கப்பா, 42, என மூவருக்கு தொடர்பிருப்பது தெரிந்து, அவர்களையும் கைது செய்தனர். பெட்டமுகிலாளம் அருகேயுள்ள போப்பனுாரை சேர்ந்த பசப்பாதான், யானையை கொன்று, தந்தத்தை விற்பனை செய்ய கொடுத்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவர் சிக்கிய பிறகே, யானை எந்த வனப்பகுதியில் கொல்லப்பட்டது என்பது தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.