ADDED : ஆக 29, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதுப்பேட்டை சின்ன மாரியம்மன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பழையபேட்டை ரவி, 48, அவதானப்பட்டி ராஜா, 52, ரயில்வே காலனி அரியப்பன், 50, மேலேரிகொட்டாய் பெருமாள், 37, மேல்பட்டி மாது, 54, கல்லுகுறுக்கி தியாகராஜ், 35, பெத்தனப்பள்ளி ஆறுமுகம், 34, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 1,190 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் 8,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.