ADDED : ஏப் 24, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் சஞ்சீவி செட்டி தெருவை சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள், 67. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இவரது இரு மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். ராஜம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், துாங்க முடியாமல் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்து காற்றாட தெருவில் நின்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர் ராஜம்மாள் கழுத்திலிருந்த, 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து ராஜம்மாள் பர்கூர் போலீசில் புகாரளித்தார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரித்து வருகின்றனர்.

