/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
70 பவுன், ரூ-.5 லட்சம் ஆசிரியர் வீட்டில் திருட்டு
/
70 பவுன், ரூ-.5 லட்சம் ஆசிரியர் வீட்டில் திருட்டு
ADDED : ஆக 24, 2025 01:20 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அருகே, ஆசிரியர் தம்பதியர் வீட்டில் பூட்டை உடைத்து, 70 பவுன் நகை, 5 லட்சம் ரூபாயை திருடிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, வேலம்பட்டி, பாலேகுளியை சேர்ந்தவர் ஆனந்தன், 59; வேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவரின் மனைவி தெய்வானை, 43; பாலேகுளி தொடக்கப்பள்ளி ஆசிரியை.
இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை, 5:30 மணிக்கு திரும்பினர். வீட்டின் கேட் திறந்து கிடக்க, வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 70 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. ஆனந்தன் புகார் படி நாகரசம்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமையிலான மூன்று தனிப்
படையினர், திருடர்களை தேடி வருகின்றனர். முன்னதாக வீட்டிலிருந்த நாய்க்கு விஷம் கொடுத்ததில் மயங்கி கிடந்தது. கால்நடை மருத்துவ
மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.