/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி, கல்லுாரிகளில் 731 போதைப்பொருள் தடுப்பு குழு அமைத்து விழிப்புணர்வு: கலெக்டர்
/
பள்ளி, கல்லுாரிகளில் 731 போதைப்பொருள் தடுப்பு குழு அமைத்து விழிப்புணர்வு: கலெக்டர்
பள்ளி, கல்லுாரிகளில் 731 போதைப்பொருள் தடுப்பு குழு அமைத்து விழிப்புணர்வு: கலெக்டர்
பள்ளி, கல்லுாரிகளில் 731 போதைப்பொருள் தடுப்பு குழு அமைத்து விழிப்புணர்வு: கலெக்டர்
ADDED : ஆக 12, 2025 01:26 AM
நாமக்கல், ''நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில், 731 போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் அமைத்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.தமிழக துணை முதல்வர் உதயநிதி தலைமையில், சென்னை
யில் காணொலி காட்சி வாயிலாக, மாநிலம் தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி பிரசாரம் நேற்று நடந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், 'போதைப்பொருள் இல்லாத தமிழகம்' மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, எஸ்.பி., விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: உலகளாவிய வயது வந்தோர் புகையிலை கணக்கெடுப்பின்படி, 42 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் புகைத்தல் மற்றும் புகைக்காத வடிவங்கள் இரண்டும் அடங்கும். இவற்றில், அதிக விகிதத்தில் உள்ள மக்கள் மெல்லும் புகையிலை, பான், குட்கா மற்றும் பிற சார்ந்த பொருட்களை அதாவது புகைக்காத புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.தற்போது, பல பள்ளி,
கல்லுாரி மாணவர்கள், 'கூல்லிப்' என்ற குறிப்பிட்ட புகையிலை தயாரிப்பை பயன்படுத்துகின்றனர். சிலர் நம்புவது போல் இது சாக்லேட் அல்லது வாய்க்கு புத்துணர்ச்சியூட்டும் பொருள் அல்ல. இளம் வயதிலேயே புகையிலையை பயன்படுத்துவது மிகவும் தீங்கு விளைவிக்கும். புற்றுநோய், இதய நோய், நுரையீரல் கோளாறுகள் போன்ற நீண்டகால உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில், 371 போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள், கல்லுாரிகளில், 138 போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள், 40 என்.சி.சி., குழுக்கள், 182 என்.எஸ்.எஸ்., குழுக்கள் துவங்கப்பட்டு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் நண்பர் கூல்லிப், ஹான்ஸ், பீடி அல்லது சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தினால், அந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று
அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
உதவி கலெக்டர் அங்கித்குமார் ஜெயின், கலால் உதவி ஆணையர் ராஜேஸ்குமார், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கனகமாணிக்கம், கூடுதல் எஸ்.பி.,
தனராசு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.