ADDED : செப் 21, 2025 01:06 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில், 500 சவுராஷ்ட்ரா குடும்பங்கள் வசிக்கின்றன. ஓசூர் சவுராஷ்ட்ரா சபா சார்பில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் வெங்கடேச பெருமானுக்கு தசல் பூஜையை செய்து வருகின்றனர். அதன்படி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, ஓசூர் ஆந்திர சமிதியில், 7ம் ஆண்டு தசல் பூஜை மற்றும் குடும்ப விழா நடந்தது. ஓசூர் சவுராஷ்ட்ரா சபா தலைவர் ஸ்ரீதர் ராஜாராம் தலைமை வகித்தார். செயலாளர் சீனிவாசன், பொருளாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து ஆண்கள் யாசகம் பெற, பெண்கள் இன்முகத்துடன் யாகசம் வழங்கி, உலக மக்கள் நலனுக்காக, பக்தியுடன் வேண்டி கொண்டனர். கொடுக்கும் நிலையில் இருந்தாலும், பெறும் நிலையில் இருந்தாலும், அனைவரும் சமம் எனும் இறையாண்மையை உணர்த்தும் விதத்தில், தசல் பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமான் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.