/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
8 புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிக்கு ஒப்படைப்பு
/
8 புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிக்கு ஒப்படைப்பு
ADDED : பிப் 11, 2025 07:04 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடு-நிலைப் பள்ளியில் (தமிழ், ஆங்கில வழி), 1,225 மாணவ, மாண-வியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் மோசமான நிலையில் இருந்த வகுப்ப-றைகள் இடிக்கப்பட்டு, 15வது நிதிக்குழு திட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் மூலம், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய, 8 வகுப்பறைகள் கட்டப்பட்டு, அதற்கான சாவிகள், பள்ளி நிர்வாகத்திடம்
ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, 8 வகுப்பறைகளுக்கும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்கள் முன்னிலையில், தனித்தனி-யாக நேற்று காலை சிறப்பு பூஜை செய்து, மாணவ,
மாணவியர் அமர்ந்து படிக்க துவங்கினர்.தலைமையாசிரியர் பத்மாவதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பி-னர்கள் சாமி, இந்திராணி, சுகன்யா,
அபிராமி, ரஞ்சிதம், புவ-னேஸ்வரி, ராஜகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் பகுதியில், இரும்பு கேட்
அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்-திற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை
விடுத்-துள்ளனர்.