ADDED : ஆக 16, 2026 02:09 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்-வாகம் சார்பில், 80வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்-பட்டது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட எஸ்.பி., அனிதா முன்னிலை வகித்தார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், சமாதான புறாக்கள், மூவர்ண பலுான்-களை கலெக்டர் தினேஷ்குமார் பறக்க விட்டார். பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுர-வித்தார்.தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனா-ளிகள், வேளாண்மை, தோட்டக்கலைத்துறைகள் உட்பட பல்-வேறு துறைகள் சார்பில், 240 பேருக்கு, 2.19 கோடி ரூபாய் மதிப்-பிலான மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்-கினார்.
போலீஸ் மற்றும் அரசுப்பணிகளில் சிறப்பாக பணியாற்றி பல்-வேறு துறைகளை சேர்ந்த, 577 அலுவலர்களுக்கு பாராட்டு சான்-றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,105 மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்-சிகள் நடந்தன. டி.ஆர்.ஓ., மஞ்சுளா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், ஏ.டி.எஸ்.பி.,-க்கள் நமச்சிவாயம், வேலுமணி, டி.எஸ்.பி., ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவ-மனை போலுப்பள்ளி வளாகத்தில் கல்லுாரி முதல்வர் சத்யபாமா தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார். துணை முதல்வர் சாத்-விகா மற்றும் மருத்துவர்கள்,
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி நகர்ப்புற அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மது அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
* கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சேகர் தலை-மையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
