தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஆக 16, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்-டது. மாநகராட்சி கமிஷனர் ஷபீர் ஆலம் தலைமை வகித்தார். மேயர் சத்யா, தேசியக்கொடியேற்றினார். துணை மேயர் ஆனந்-தய்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சுதந்திர தினவிழாவையொட்டி, சி.எஸ்.ஆர்., நிதி பங்களிப்புடன் மாநகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஓசூர் மாநகராட்சி எல்லைகளில், 49 இடங்களில் மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கூட்டு முயற்-சியின் மூலம், ஓசூர் மாநகராட்சியானது சுற்றுச்சூழல் பாது-காப்பில் பொதுமக்களின் அதிக பங்களிப்பை ஊக்குவிப்பதோடு, நகரின் பசுமை பகுதிகளை பாதுகாப்பதிலும் மேம்படுத்தும் நடவ-டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அலுவ-லர்கள் கூறினர்.

சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வரும் சூளகிரி ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில், 80வது சுதந்திர தின விழாவையொட்டி கோபச்சந்திரம் தேர்வீதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சூளகிரி இன்ஸ்-பெக்டர் சையதுசுல்தான் பாஷா, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us