ADDED : ஆக 15, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
ஓசூர்; ஓசூர், வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா, 23. ராஜகணபதி நகரை சேர்ந்தவர் தீபக், 19. கடந்-தாண்டு ஒன்றாக கல்லுாரியில் படித்து உள்ளனர். அப்போது இருந்தே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது.
கடந்த, 12ல், ஓசூர் பெரியார் நகர் சர்க்கிள் அருகே நண்பருடன் நின்ற ஜோஸ்வாவை, தீபக் மற்றும் அவருடன் வந்த தேர்பேட்டையை சேர்ந்த தர்ஷன், 19, ராஜ கணபதி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரி, 24, ஆகியோர் இரும்பு ராடால் அடித்துள்ளனர். படுகாயமடைந்த ஜோஸ்வா, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, தாக்குதல் நடத்திய மூவர் மீதும் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்-தனர்.அதேபோல, தீபக் தரப்பில் தர்ஷன் அளித்த புகார் படி ஜோஸ்வா, 23, மற்றும் ஆவலப்பள்ளியை சேர்ந்த பிரவீன், 22, ஆகியோர் மீதும் போலீசார் வழக்குபதிந்தனர்.
