ஆர்.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் குப்பையில் வீசப்பட்ட தேர்தல் பொருள் ஆவணங்கள்
ஆர்.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் குப்பையில் வீசப்பட்ட தேர்தல் பொருள் ஆவணங்கள்
ADDED : ஆக 15, 2026 05:20 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே, கிருஷ்ண-கிரி சட்டசபை தொகுதிக்கு தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட, விவிபேட் ரோல்கள், இயந்திர பேட்டரிகள், வாக்காளர் பட்டியல் மற்றும் ஆவ-ணங்கள் வீசப்பட்டிருந்தன.
இதில், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவ-ணங்கள் கரையான் அரிக்கப்பட்ட நிலையிலும், பேட்டரிகள் மற்றும் ரோல் பேப்பர்கள் குப்பை-யோடு குப்பையாக கலந்து இருந்தன.
இது குறித்து, தேசிய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும், கிருஷ்ணகிரி சட்டசபை தொகு-தியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பா-ளருமான சந்திரமோகன் கூறியதாவது:தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தேவைப்படாத ஆவணங்கள் இருந்தால், அதை அழிப்பதை விடுத்து பொதுவெ-ளியில் வீச வேண்டிய அவசியம் என்ன. இயந்தி-ரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழைய பேட்டரி உள்ளிட்ட சாதனங்களை, பெங்களூரு பெல் நிறு-வனத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும்.
அவைகளும் இங்கு குப்பையாக கிடக்கிறது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்ட-ருமான தினேஷ்குமார் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
