விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டுகோள்
விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டுகோள்
ADDED : ஆக 15, 2026 05:20 AM
கிருஷ்ணகிரி; விதையின் தரத்தை அறிந்து கொள்ள, விதை பரி-சோதனை அவசியம் என, வேளாண் அலுவலர் லோகநாயகி கேட்டு கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தரமான விதை என்பது, முளைப்பு திறன், புறத்-துாய்மை, பிற ரக
கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயி-ருக்கும் மாறுபடும். தேவையான பயிர் எண்ணிக்-கையை பராமரிக்க, நல்ல முளைப்பு திறன்
வேண்டும்.
இதனால் விதை செலவு குறையும். புறத்-துாய்மை பரிசோதனையில், பிற பயிர் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்டறியப்படு-வதால், விதையின் இனத்துாய்மை மற்றும் புறத்-துாய்மை காப்பாற்றப்படுகிறது. முளைப்பு திறனை காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்-ளுதல் அவசியம். விதைகளை சேமிக்கும் போது, பூச்சி நோய் தாக்குதலால் முறைப்பு திறன் கெடாமல், நீண்ட நாட்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூ-டாது.
இதற்கு விதை பரிசோதனை அவசியம். விதை விற்பனையாளர்கள், தாங்கள் இருப்பு வைத்-துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ள, விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலர், விதை பரி-சோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், கலெக்டர் அலுவ-லகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
