/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுகுறிக்கு காலபைரவர் கோவிலில் 815ம் ஆண்டு பைரவ ஜெயந்தி விழா
/
கல்லுகுறிக்கு காலபைரவர் கோவிலில் 815ம் ஆண்டு பைரவ ஜெயந்தி விழா
கல்லுகுறிக்கு காலபைரவர் கோவிலில் 815ம் ஆண்டு பைரவ ஜெயந்தி விழா
கல்லுகுறிக்கு காலபைரவர் கோவிலில் 815ம் ஆண்டு பைரவ ஜெயந்தி விழா
ADDED : டிச 13, 2025 05:27 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கல்லுகுறிக்கி கிராமம், பெரியஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள, 12ம் நுாற்றாண்டில் சுயம்பு லிங்கமாக உருவெ-டுத்த காலபைரவர் கோவிலில், 815ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபை-ரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார்.மதியம், 12:00 மணிக்கு காலபைரவர், சீத்த பைரவர் உற்சவர் கோவிலை வலம் வரும் நிகழ்வு நடந்தது. பைரவ ஜெயந்தியை-யொட்டி, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூசணி, அகல் விளக்கு மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.