/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்
/
150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்
150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்
150 சிறு குறு விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி வழங்கல்
ADDED : டிச 13, 2025 05:27 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு, புல் அறுக்கும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதி-யழகன், கருவிகளை வழங்கி பேசியதாவது:கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தீவன அபிவிருத்தி
திட்டத்தில், தீவன விரயத்தை குறைக்கவும், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மேம்
பாட்டிற்காகவும், 50 சதவீத மானியத்தில், தலா, 25,935 ரூபாய் மதிப்பில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு, 19.45 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்சாரத்தில் இயங்கும் நவீன புல் அறுக்கும் கருவிகள் வழங்கப்
பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளவ-ரசன், துணை இயக்குனர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

