/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் பள்ளி ஹெச்.எம்.,மிடம் ரூ.8.23 லட்சம் மோசடி
/
தனியார் பள்ளி ஹெச்.எம்.,மிடம் ரூ.8.23 லட்சம் மோசடி
தனியார் பள்ளி ஹெச்.எம்.,மிடம் ரூ.8.23 லட்சம் மோசடி
தனியார் பள்ளி ஹெச்.எம்.,மிடம் ரூ.8.23 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 10, 2024 06:47 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே வசிப்பவர் சுரேஷ், 64;, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்.
கடந்த ஜூன், 13 ல் அவரை மர்மநபர் ஒருவர் மொபைலில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், உங்களின் பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. அந்த நிதியை பெற நீங்கள் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பட்சத்தில், உங்களுக்கு அந்த நிதி கிடைக்கும் என கூறினார். இதை நம்பிய தலைமை ஆசிரியர், அந்த நபரிடம் பேசினார். தொடர்ந்து நிதியை பெற நடைமுறை செலவுகளுக்காக, 8.23 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன்பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.