/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்த 84 மரங்கள் அகற்றம்
/
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்த 84 மரங்கள் அகற்றம்
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்த 84 மரங்கள் அகற்றம்
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்த 84 மரங்கள் அகற்றம்
ADDED : மே 04, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து விழுந்த மரங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டது என, நகராட்சி கமிஷனர் சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரியில் கடந்த, 1- மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு நகரின் பல பகுதி
களில் மரங்கள் வேருடன் சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன. அதன்படி, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 29 மரங்களும், சிட்கோ வளாகத்தில், 4 மரங்களும், ஜக்கப்பன் நகரில், 9 மரங்களும், காந்திநகர் பகுதியில், 6 மரங்கள் என நகராட்சி பகுதியில், 20 இடங்களில், மொத்தம், 4 மரங்கள் வேருடன் சாய்ந்தும், 80 மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன.
இதையடுத்து, 11 மரம் அறுக்கும் தொழிலாளர்களை, மூன்று குழுக்களாக பிரித்து பொக்லைன் உதவியுடன், 48 மணி நேரத்தில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. விழும் நிலையில் உள்ள மரங்களும் அகற்றப்பட்டு வருகிறது. பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்கள், கோவில் பின்புறம் இருந்த 1 தைல மரம், 80 சதவீதம் பாதிக்கப்பட்டு கீழே விழும் நிலையில் இருந்தது. மரம் கீழே விழுந்தால் கோவில் அருகிலுள்ள குடிநீர் தொட்டி மற்றும் குடியிருப்பு வீடுகள் பாதிப்படையும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, அந்த மரமும் அகற்றப்பட்டது. சிலர் நல்ல நிலையில் இருந்த மரத்தை அகற்றிவிட்டதாக தவறான தகவல்களை, சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.