/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகாவில் இருந்து 85 யானைகள் இடம் பெயர்வு பல்வேறு குழுக்களாக தமிழக எல்லையில் முகாம்
/
கர்நாடகாவில் இருந்து 85 யானைகள் இடம் பெயர்வு பல்வேறு குழுக்களாக தமிழக எல்லையில் முகாம்
கர்நாடகாவில் இருந்து 85 யானைகள் இடம் பெயர்வு பல்வேறு குழுக்களாக தமிழக எல்லையில் முகாம்
கர்நாடகாவில் இருந்து 85 யானைகள் இடம் பெயர்வு பல்வேறு குழுக்களாக தமிழக எல்லையில் முகாம்
ADDED : நவ 05, 2024 06:43 AM
ஓசூர்: கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்துள்ள, 85க்கும் மேற்-பட்ட யானைகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழக எல்லை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவிலிருந்து ஆண்டுதோறும், 150 க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து, தமிழக எல்லையான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனச்சரகம் வழியாக, ஆந்திர மாநில வனப்பகுதி வரை சென்று விட்டு, மீண்டும் கர்நாடகாவிற்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம் பெயர்வு சமீபத்தில் துவங்கியது. பல்-வேறு குழுக்களாக யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளன. இதில், ஜவளகிரி வனச்சரகத்தின் தளி வனப்பகு-தியில், 30 க்கும் மேற்பட்ட யானைகளும், ஜவளகிரி வனப்பகு-தியில், 35 க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டுள்ளன. அதேபோல், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் காப்புக்காட்டில், 20 க்கும் மேற்பட்ட யானைகள், 3 குழுக்களாக முகாமிட்டுள்ளன. ஒற்றை யானை தனியாக உள்ளது.ஜவளகிரி, தளி, நொகனுார் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள மொத்தம், 85 க்கும் மேற்பட்ட யானைகள், எந்த நேரத்திலும், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்-பகுதிக்கு இடம் பெயர்ந்து, பின் ஓசூர் வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அவ்வாறு சென்று, யானைகள் மீண்டும் தேன்க-னிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்தால், விவசாய பயிர்கள் சேதமாகும். அத்துடன் யானைகள் தாக்கி, மனித உயிரி-ழப்புகள் ஏற்படலாம்.அதனால், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் மொத்தம், 80 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், ட்ரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்-டத்தை கண்காணித்து, அவற்றை, ஓசூர் நோக்கி இடம் பெயர விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், வனப்பகுதியை ஒட்-டிய, கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், விவசாய நிலத்-திற்கு இரவு காவலுக்கும், வனத்திற்கு ஆடு, மாடு மேய்க்கவும் செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.