/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 85 பேருக்கு ஆணை
/
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 85 பேருக்கு ஆணை
ADDED : ஏப் 27, 2025 03:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த மகளிருக்கான தனியார் வேலை-வாய்ப்பு முகாமில், 85 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்-கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவ-னத்தின், மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடந்தது. இதில் பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த, 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள், 156 பேர் கலந்து கொண்டனர். நேர்காணலை, தனியார் நிறுவன மனிதவள
மேம்பாடு அலுவலர் செந்தில்குமார், காமராஜ், குஷ்புசிங் ஆகியோர் மேற்கொண்டனர்.
இதில், தேர்வு செய்யப்பட்ட, 85 மகளிருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கீதா, கல்லுாரி பணி நியமன அலுவலர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில் தலைமை வகித்த, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், பணி நியமன ஆணைகள் வழங்கி பேசியதாவது: தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில், 12,000 ரூபாய் முதல், 16,000 ரூபாய் வரை வழங்கப்படும். மேலும், தனியார் நிறுவனம் சார்பில் போக்-குவரத்து வசதி, உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தே நாட்டின் முன்னேற்றம் அமைகிறது. தனியார் நிறுவனங்கள் பணிக்கு மற்றுமின்றி, அரசு போட்டி தேர்வுகளிலும், மாணவியர் அதிகளவில் பங்கேற்று, வெற்றி பெற்று அரசு பணிகளில் சேர வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், போட்டி தேர்வுகளுக்கு இல-வசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில், பெண்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும். நாளிதழ்களை தொடர்ந்து படிப்-பதன் மூலம், அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.