/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜமாபந்தி வேப்பனஹள்ளியில் 85 மனுக்கள் ஆய்வு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜமாபந்தி வேப்பனஹள்ளியில் 85 மனுக்கள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜமாபந்தி வேப்பனஹள்ளியில் 85 மனுக்கள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜமாபந்தி வேப்பனஹள்ளியில் 85 மனுக்கள் ஆய்வு
ADDED : மே 17, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தின், எட்டு வட்டங்களுக்கான ஜமாபந்தி நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், வேப்பனஹள்ளி வட்டத்திற்குட்பட்ட, 28 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில், வேப்பனஹள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 28 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. முதல் நாளில் பதிமடுகு, கிருஷ்ணப்பன் நாய்க்கன் போடூர், இனாம்குட்டப்பள்ளி, தளிப்பள்ளி, தடதாரை உள்பட, 28 கிராமங்களை சேர்ந்தவர்களிடமிருந்து, 85 மனுக்கள் பெறப்பட்டன, இவற்றில் பெரும்பாலானவை முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, நில அபகரிப்பு, புதிய ரேஷன் அட்டை, கிராம கணக்கில் மாற்றம் உள்ளிட்டவைகளாக உள்ளன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராம கணக்கு பதிவேடு
களான 'அ'- பதிவேடு, எப்.எம்.பி., பதிவேடு, அடங்கல், 1 - ஏ - உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, பட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு
பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. நாளை வேப்பனஹள்ளி வட்டத்திற்குட்பட்ட மேலும், 21 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.
உதவி இயக்குனர் (நில அளவை) ராஜ்குமார், மாவட்ட கலெக்டரின் அலுவலக மேலாளர் குருநாதன், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, தனி தாசில்தார்கள் இளங்கோ, மகேஸ்வரி, வடிவேல் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.