/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 9 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 9 பேர் கைது
ADDED : டிச 11, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை பொருட்கள்
லாட்டரி விற்ற 9 பேர் கைது
கிருஷ்ணகிரி, டிச. 11-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என போலீசார் சோதனையிட்டனர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி காளியப்பன், 40 உள்பட, 5 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல லாட்டரி விற்ற பர்கூர் சாதிக், 56, தேன்கனிக்கோட்டை அக்மல், 35, நதீம், 30, அமீர், 40 ஆகிய, 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3,600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.