/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 மொபைல் போன்கள் மீட்பு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 மொபைல் போன்கள் மீட்பு
ADDED : அக் 24, 2024 01:05 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 மொபைல் போன்கள் மீட்பு
கிருஷ்ணகிரி, அக். 24-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திருட்டு போனதாகவும், தொலைந்து போனதாகவும் புகார் செய்யப்பட்டவர்களின், 97 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமை வகித்து, உரியவர்களிடம் மொபைல்களை
ஒப்படைத்தார்.
பின்னர் அவர், நிருபர்களிடம்
கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2023 செப்., வரை மொபைல் போன்கள் காணாமல் போனதாகவும், திருடப்பட்டதாகவும் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்தன. தமிழக அரசால் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, மொபைல் போன்கள் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்ட உடன், மொபைல்போனின் ஐ.எம்.இ.ஐ., விபரங்கள் பதிவேற்றி, 'டிரேசிங்' செய்யப்படுகிறது.
எந்த நெட்வொர்க்கில், அந்த மொபைலை யார் பயன்படுத்தினாலும், சைபர் கிரைம் போலீசாருக்கும், புகாரளித்தவருக்கும், எஸ்.எம்.எஸ்., அலார்ட் வரும். இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் உதவியுடன், தொலைந்து போன மொபைல்போன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
காணாமல் போன, திருடப்பட்ட மொபைல்போன்களை விரைவாக கண்டுபிடிக்கவும், மீட்கவும் 'CEIR Portal' வலைதளம் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆக., முதல் செப்., வரையில், தொலைந்து போன, 50 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல திருடப்பட்ட, 47 மொபைல் போன்களை கண்டு
பிடித்து, மாவட்ட எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காணாமல் மற்றும் திருடு போன, 18.24 லட்சம் ரூபாய் மதிப்பில், 97 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.