/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழைநீர் வடிகாலான 23 அடி அகல சாலை ஒரு கி.மீ., துாரத்திற்கு ஜல்லி, மண் அரிப்பு
/
மழைநீர் வடிகாலான 23 அடி அகல சாலை ஒரு கி.மீ., துாரத்திற்கு ஜல்லி, மண் அரிப்பு
மழைநீர் வடிகாலான 23 அடி அகல சாலை ஒரு கி.மீ., துாரத்திற்கு ஜல்லி, மண் அரிப்பு
மழைநீர் வடிகாலான 23 அடி அகல சாலை ஒரு கி.மீ., துாரத்திற்கு ஜல்லி, மண் அரிப்பு
ADDED : அக் 17, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே, தார்ச்சாலை அமைக்க, ஜல்லி, மண் போடப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனால், தற்போது அச்சாலையில் ஜல்லி, மண் அரிக்கப்பட்டு, மழைநீர் வடிகால்
பகுதியாக மாறி விட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பின்புறம், பெரியமுத்துார் பஞ்.,க்கு உட்பட்ட பச்சமுத்து நகர் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இங்கு தார்ச்சாலை அமைக்க, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு ஜல்லி, மண் கொட்டப்பட்டது. ஆனால் பணிகள் நடக்கவில்லை. சாலை அமைக்க, பஞ்., சார்பில் இருமுறை நிதி ஒதுக்கப்பட்டும் சாலை அமைக்கவில்லை. தற்போது குறுக்கு சந்துகளில், சிமென்ட் சாலை அமைத்த நிலையிலும், 23 அடி அகல மெயின் சாலையில் தார்ச்சாலை அமைக்கப்படவே இல்லை. தற்போது பெய்து வரும் தொடர்மழையில், அச்சாலை
யில் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிகற்கள், மண் அரித்து செல்லப்பட்டு, இருந்த மண் சாலையும் குண்டும் குழியுமாக, மழைநீர் வடிகாலாக மாறியுள்ளது. இது குறித்து பஞ்., நிர்வாகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மக்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
தற்போது சேறும், சகதியுமாக மழைநீர் வடிகாலாக மாறியுள்ள இச்சாலையில், தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வாகனங்களில் செல்லும்போது வழு க்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.