ADDED : அக் 06, 2024 03:33 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு, நேற்று காலை டொயோட்டா காரில், 3 பேர் பயணம் செய்தனர்.
கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி அருகே எடவனஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கார் முன்புற இன்ஜின் பகுதியில் புகை வந்தது. சாலையில் காரை நிறுத்தி விட்டு, 3 பேரும் கீழே இறங்-கினர். அப்போது காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. கர்நா-டகா மாநில தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்-தனர். காரின் முன்பகுதி மட்டும் எரிந்து சேதமானது. காரில் ஏற்-பட்ட தீ விபத்தால், அவ்வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்திப்பள்ளி போலீசார் காரை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கொண்-டாட, கர்நாடகா வாழ் தமிழர்கள் ஊருக்கு திரும்பியதால், கர்நா-டகா மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட்டில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் சிப்காட் ஜங்ஷன் வரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், கோபசந்திரம், சாமல்பள்ளம், மேலு-மலை, போலுப்பள்ளி பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிக-மாக இருந்தது. இப்பகுதியில் உயர்மட்ட பாலம் வேலை நடப்-பதால், வார விடுமுறை நாட்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.