/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டாய சான்றிதழ் இல்லாவிட்டால் புகார் செய்யலாம்; பயிற்சியில் தகவல்+
/
கட்டாய சான்றிதழ் இல்லாவிட்டால் புகார் செய்யலாம்; பயிற்சியில் தகவல்+
கட்டாய சான்றிதழ் இல்லாவிட்டால் புகார் செய்யலாம்; பயிற்சியில் தகவல்+
கட்டாய சான்றிதழ் இல்லாவிட்டால் புகார் செய்யலாம்; பயிற்சியில் தகவல்+
ADDED : டிச 07, 2024 07:22 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றிய அலுவலகத்தில், பெங்க-ளூரு இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில், கிராம பஞ்., அளவில் இந்திய தர நிலைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்-புணர்வு பயிற்சி நடந்தது. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவா-சலு ரெட்டி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் ராஜேஷ், சீனிவாச-மூர்த்தி முன்னிலை வகித்தனர். இந்திய தர நிர்ணய அமைவன முன்னாள் இயக்குனர் தாமரை செல்வன், 'பொருட்களுக்கான தரத்தை முறைப்படுத்துதல், ஐ.எஸ்.ஐ., தரச்சான்றிதழ் வழங்-குதல், தங்க நகைகளுக்கான ஹால் மார்க் தரச்சான்றிதழ் வழங்-குதல் மற்றும் தங்கத்தின்
துாய்மையை உறுதிப்படுத்துதல், வெளி-நாட்டு தயாரிப்புகளுக்கான தரச்சான்றிதழ் சேவை வழங்குதல், மின்னணு மற்றும்
தொழில்நுட்ப சாதனங்களுக்கான பி.ஐ.எஸ்., தரச்சான்றிதழ்களுடன் கூடிய கட்டாய பதிவு சான்றிதழ் குறித்து' விளக்கி
கூறினார்.பயிற்சியில், பஞ்., அளவில் பொருட்கள் வாங்கும் போது, ஐ.எஸ்.ஐ., தரச்சான்றிதழ் மற்றும் கட்டாய சான்றிதழ் உள்ளதா
என்பதை பார்த்து பொருட்களை வாங்க வேண்டும். மத்திய அரசு, 723 பொருட்களுக்கு பி.ஐ.எஸ்., கட்டாய சான்றிதழ்
அறிவித்துள்-ளது. வீட்டு உபயோக சிலிண்டர், ஹெல்மெட், சிமென்ட், குக்கர், விளையாட்டு பொம்மைகள், காலணிகள்,
வாகனங்களின் டயர்கள், பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு கட்டாய தரச்-சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
தரக்குறைபாடு உள்ள பொருட்கள் குறித்து, பி.ஐ.எஸ்., கேர் செயலி மூலமாக புகார் செய்யலாம் எனவும் கூறப்பட்டது.துணை பி.டி.ஓ.,க்கள் கோபாலகண்ணன், விவேகானந்தன் மற்றும் பஞ்., தலைவர்கள் பங்கேற்றனர்.