/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குறைதீர் கூட்டத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயி
/
குறைதீர் கூட்டத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயி
குறைதீர் கூட்டத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயி
குறைதீர் கூட்டத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயி
ADDED : பிப் 17, 2024 12:47 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க ஓசூர் அருகே நந்திமங்கலம் பஞ்., பெருமாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ், தனது தாய், தந்தை, மனைவி வீணா, குழந்தை ஆகியோருடன் கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை மனு அளித்தார். அவர், தனது குடும்பத்துடன் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்ததை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
பின் தேவராஜ் கலெக்டரிடம் கூறியதாவது: மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில், ஆழ்துளை கிணறு அமைத்தேன். இதற்காக மின்சார வாரியத்தில், 3 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தி, எனது நிலத்தின் அருகே உள்ள கோவில் மானிய நிலத்தில், 2 மின் கம்பங்கள் நட்டு இணைப்பு வழங்கினர். இதற்கு உள்ளூரை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி மோகன் மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, 2 மின் கம்பங்களை அகற்றிவிட்டனர்.
இதுகுறித்து கலெக்டர், எஸ்.பி., மற்றும் சென்னை டி.ஜி.பி., அலுவலகம் வரை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மின்கம்பத்தை அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலத்தின் வழியாக மின்கம்பம் கொண்டு செல்ல உரிய அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.